சத்தமே இல்லாமல் சைபர் தாக்குதலை ஏவிவிட்ட சீனா.. எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன நாட்டின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால் சீன தரப்பில் பலத்த உயிரிழப்பு சேதம் ஏற்பட்டு உள்ளது என்பது மட்டும் அமெரிக்காவின் உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய வங்கிகள் நிதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் இணைய தளங்கள் மீது அதிதீவிரமான சைபர் தாக்குதலானது தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பாக பாதிக்கப்படும் முறைகள் சேவை மறுப்புகள் என்றும் கூறப்படுகிறது. 

இதன் மூலமாக இணையதளம் மற்றும் வலையமைப்புக்கு தரும் சேவைகளை அதன் பயன்பாட்டாளர்கள் அணுக முடியாத வண்ணம் முடக்கும் செயல் என்றும் கூறப்படுகிறது. செயற்கையான முறையில் அதிக போலி வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி இணையதளத்தை பயன்படுத்த இயலாத வகையில், இந்த சைபர் தாக்குதல் அரங்கேறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அரசு இணையதளங்கள், வங்கி சேவைகள் ஆகியவற்றில் இந்த சைபர் தாக்குதலை சீனா தொடங்கியுள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உளவு அமைப்பின் பெயரில், சீனாவுடன் நேரடி தொடர்பில் இருக்கும் 52 செயலிகளை முடக்க வேண்டும் என்ற பரிந்துரையும் செய்யப்பட்டு, இந்த செயலிகள் பாதுகாப்பானவை அல்ல என்றும் கூறியுள்ளது. 

அதிலும் டிக் டாக், யூசி பிரௌசர், ஷேர் சாட், பிலிம் மாஸ்டர் உள்ளிட்டவற்றை தடை செய்ய வாய்ப்புள்ள செயலிகளின் பட்டியலை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் விரைவில் எடுக்கப்படும் முடிவானது பல செயலிகளுக்கு இறுதி தடையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது டிக் டாக் மற்றும் யூசி ப்ரவுசர், ஹெலோ உள்ளிட்ட சில சேவைகளைப் பயன்படுத்தும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடு போகலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China create cyber attack to India warn by CID


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal