குழந்தை பிறப்பு வீழ்ச்சி: சீனாவில் ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து! - Seithipunal
Seithipunal


உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவில், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவைச் சமாளிக்க, சீன அரசு கருத்தடை சாதனங்கள் மீதான வரி விதிப்புக் கொள்கையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

பிறப்பு விகிதச் சரிவு:
1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" அமலில் இருந்த நிலையில், அதன் பிறகு 2015இல் இரண்டு குழந்தைகளுக்கும், 2021இல் மூன்று குழந்தைகளுக்கும் அரசு அனுமதி அளித்து ஊக்குவித்தது. பல்வேறு சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டும், ஆண்டுதோறும் பிறப்பு விகிதச் சரிவு அதிகரித்ததால் முதியோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரித்ததால், சீனாவை முந்தி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியது.

ஆணுறைக்கு வரி:
இந்தச் சூழலில், புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின்படி, 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல், ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி, கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பொதுவாகப் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.

நிபுணர்களின் எச்சரிக்கை:
கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது, மக்களைத் திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த வரி விதிப்பு குறித்துச் சீனச் சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. பலர், "ஆணுறை வாங்குவதைத் தவிர்ப்பதை விட, குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக்கும்" என்று விமர்சித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China Condoms Population birth rate 


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->