பராமரிப்பு மையத்தில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தைகள்: 13 பேர் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இருந்த 53 கைக்குழந்தைகளின் கைகால்கள் கட்டப்பட்டு துன்புறுத்தப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் குறித்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தை மூடி சீல் வைத்துள்ளனர். தொடர்ந்து, அறக்கட்டளையின் தலைவர், மேனேஜர் மற்றும் 11 பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரில் நடந்துள்ளது. அங்குள்ள பகல்நேரப் பராமரிப்பு மையம் ஒன்றில் சிறு குழந்தைகள், வெறும் டயப்பர்களுடன், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில், நெரிசலான அறைகளில் அடைக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளை துன்புறுத்தும் இந்தக் காணொளி, காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பிராந்திய குழந்தைகள் காப்பகங்களை நிர்வகிக்கும் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள முக்கிய குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து 30 நபர்களிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, யோக்யகர்த்தா காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 13 சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜாலான் பாகேலில் அமைந்துள்ள லிட்டில் அரேஷா குழந்தைகள் காப்பகத்தை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக மூடி சீல் வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Children Tortured with Hands and Feet Tied at Care Center in Indonesia


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->