ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 40 ஆண்டு பழமையான கட்டிடத்தின் ஸ்லாப் உடைந்து இடிந்து விழுந்து விபத்து..! - Seithipunal
Seithipunal


ஸ்டான்லி மருத்துவமனை கடந்த 1986-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் 08 மாடி கட்டிடமாக கட்டித் திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் சிகிச்சைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு விபத்து பிரிவு, எலும்பு முறிவு, நீரிழிவு நோய், கை ஒட்டுறுப்பு, கல்லீரல் சிகிச்சை, இதயம், என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு ஜெயில் கைதிகளுக்கான தனி சிறை கைதிகள் வாடும் உள்ளது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காகவும் அறுவை சிகிச்சைக்காகவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். 

பழமை யான கட்டிடம் என்பதால் அடிக்கடி பழுதடைந்து வெளிப்புற சிமென்ட் கலவை பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென 08 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கான்கிரீட் ஸ்லாப் உடைந்து விழுந்துள்ளது. அப்போது, கட்டிடம் அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. ஆனால், கட்டிடத்தின் தரைதள பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை மீது ஸ்லாப் விழுந்ததில் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

இந்த 08 மாடி கட்டிடம் கொரோனா காலகட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிட மாகும். மீண்டும் ஸ்லாப் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்யவேண்டுமென ஸ்டான்லி மருத்துவமனை நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

40 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் இதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்பது சமூக ஆர் வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident at Stanley Government Hospital Slab of 40 Year Old Building Cracks and Collapses


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->