மே 04 தேர்தல் முடிவு; தவெக தலைவர் விஜய் நாளை மகாராஷ்டிரா பயணம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23 -ஆம் தேதி முடிந்தது. வரும் மே 04-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு ஓய்வுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய், இன்று காலை திருச்செந்தூர் சென்று அங்கு முருகனை தரிசனம் செய்துள்ளார். அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.  இதனைத் தொடர்ந்து அவர் நாளை மகாராஷ்டிரா செல்லவுள்ளார்.

தவெக தமிழ்நாட்டின் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுயேட்சை வேட்பாளருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் இன்று தவெக தலைவர் விஜய், திருச்செந்தூர் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் வரும் 30-ஆம் தேதி 232 தொகுதி தவெக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்று அங்கிருந்து ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், விஜய் தொடர்ந்து இரண்டாவது கோயிலுக்கு பயணம் செய்ய உள்ளமை கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Leader Vijay to Visit Maharashtra Tomorrow


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->