புளியந்தோப்பில் வீட்டில் தனியாக வசித்த 76 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது..! - Seithipunal
Seithipunal


புளியந்தோப்பில் 76 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கே.எம்.கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் அல்லிராணி (76). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், அவருக்கு ராமச்சந்திரன், முரளிதரன், வாசுதேவன், கருணாநிதி என 04 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அல்லிராணியின் 04 மகன்களும் அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகள் கீதா, புரசைவாக்கம் பகுதியில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அல்லிராணி தனிமையில் வசித்து வருவதால், மகள் கீதா, அவ்வப்போது வந்து தேவையான பணிவிடைகளை தாய்க்கு செய்து விட்டு செல்கிறார். இந்நிலையில் வழமைபோன்று நேற்று தனது தாயை பார்க்க நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அல்லிராணி அணிந்திருந்த நைட்டி கிழிந்த நிலையில் இருந்ததை பார்த்து கீதா கேட்டுள்ளார். ஆனால், வயது முதிர்ச்சி காரணமாக அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.

பின்னர் தாயை குளிக்க வைத்துள்ளார். அப்போது தாயின் உடலில் மாற்றங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அது குறித்து, தாயிடம் கேட்டுள்ளார். அப்போது அல்லிராணி பகீர் தகவலை மக்களிடம் கூறியுள்ளார்.

அதாவது, புளியந்தோப்பு பட்டாளம் கே.எம்.கார்டன் 13-வது தெருவை சேர்ந்த மருது என்கின்ற மருதப்பன் (56) என்பவர் நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த மகள் கீதா உடனே அல்லிராணியை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அதன் பின்னர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கீதா புகார் அளித்தார். உடனே போலீசார், மருது வீட்டிற்கு விரைந்ததுள்ளனர். அங்கு அவர் இல்லாத நிலையில், அங்கிருந்தவர்களிடம், 'மருதுவுக்கு போன் செய்து உங்களை தேடி போலீசார் வந்துள்ளனர் என கூறுங்கள்' என்று போலீசார் கூறியுள்ளனர். 

குடும்பத்தினரும் தொடர்பு கொண்டபோது, எந்தவித பதிலும் வரவில்லை. அத்துடன், வீட்டில் இருந்து போன் வந்ததால் மருது தலைமறைவாங்கியுள்ளார்.

இதையடுத்து அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்தத்தில், அவர் கூடுவாஞ்சேரி அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று இன்று காலை மருதுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், மருது பிளம்பர் வேலை செய்து வருகிறார். 12 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இவர்களுக்கு 03 மகன்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் மனைவியுடனும் மற்ற 02 பேர் மருதுவுடனும் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று மூதாட்டி தனிமையில் இருந்ததை அறிந்து மருது, அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மருது மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lust Crazed Brute Arrested for Raping 76 Year Old Woman Living Alone in Pulianthope


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->