உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன்  மேக்னஸ் கார்ல்சனுக்கு எளிய முறையில் திருமணம்..! 
                                    
                                    
                                   chess champion Magnus Carlsen marries in a simple way
 
                                 
                               
                                
                                      
                                            Gallery_#id=44Gallery_#id=43Gallery_#id=42Gallery_#id=41Gallery_#id=40Gallery_#id=39நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன்  தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் முடித்துள்ளார்.
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நேற்று முறைப்படி நடந்து முடிந்துள்ளது.
Holmenkollen Chapel தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணத்தில் நார்வே நாட்டு செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா மற்றும் அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர் ஹெய்ன் நீல்சன் மற்றும் ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன்  திருமணத்தின் போது நெட்பிளிக்ஸ் படக்குழுவினரும் உடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமணம் முடிந்த பின், 05 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில், கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் நிகழ்வின் போது இவர்கள் காதலை வெளிப்படுத்தினர். அதன்பின் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் ஜோடியாக வலம் வந்தனர்.

மேலும், 26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தவர். ஊடக அறிக்கைகளின்படி, அவர் ஒஸ்லோவில் வளர்ந்துளார். அமெரிக்காவில் படித்துளார். சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளதோடு, அவர் அங்கு நிரந்தர குடியுரிமையும் பெற்றுள்ளார்.
மலோனுடனான திருமணம் கார்ல்சனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக பேசப்படும்  கார்ல்சன், ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட, ஏராளமான அங்கீகாரங்களைப் செஸ் போட்டிகளில் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       chess champion Magnus Carlsen marries in a simple way