விமானத்தில் செல்போன் சார்ஜர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.. பயணிகள் அச்சம்.!
Cellphone charger fire accident in thaiwan flight
தைவான் நாட்டில் விமானத்தில் திடீரென செல்போன் சார்ஜர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தைவான் நாட்டிலிருந்து விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் பயணி ஒருவர் வைத்திருந்த செல்போன் சார்ஜர் தீப்பற்றி இருந்தது.

இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக விமான பணிப்பெண்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சார்ஜரின் உரிமையாளர் மற்றும் அவரின் அருகே அமர்ந்து இருந்த நபர் இரண்டு பேர் காயமடைந்தனர். அனுப்பினர் விமானம் முழுவதும் முழு சோதனை நடத்தப்பட்ட பின்னரே இயக்கப்பட்டது.
English Summary
Cellphone charger fire accident in thaiwan flight