பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கனடா முடிவு; இஸ்ரேல் கடும் எதிர்ப்பு!
Canada decides to recognize Palestine as a separate state Israel strongly opposes
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஆதரவு வளர்ந்து வருகிறது. இஸ்ரேலின் எதிர்ப்பு தொடர்ந்தாலும், பல நாடுகள் இருநாடு தீர்வையே மத்திய கிழக்கில் நிலையான அமைதிக்கான ஒரே வழியாகக் கருதுகின்றன. வரவிருக்கும் ஐ.நா. கூட்டம், இந்த விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெறும்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக இங்கிலாந்து,பிரான்ஸ் அறிவித்து உள்ளன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.இந்த நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போவதாக கனடா, மால்டா ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது:
இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பாலஸ்தீனம்.இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண நீண்ட காலமாக உறுதி பூண்டுள்ளது.ஐ.நா. சபையில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கும் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம் என கூறியுள்ளார்.மேலும் அங்கு 2026-ம் ஆண்டில்பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும் என கூறினார்.
இதனால் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐதா பொதுச் சபையில் பாலஸ்தீன் முறை அங்கீகரிப்பதற்கான கொள்கை ரீதியான முடிவை மால்டா அரசாங்கம் எடுத்துள்ளது . பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
English Summary
Canada decides to recognize Palestine as a separate state Israel strongly opposes