தொடங்கியது அனல் பறக்கும் 'பாக்ஸிங் டே' டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி! தடுமாறும் இங்கிலாந்து!
boxing day 2025 aus vs eng
கிரிக்கெட் உலகின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆஷஸ்' தொடரின் 4-ஆவது டெஸ்ட் போட்டியான 'பாக்ஸிங் டே' (Boxing Day) ஆட்டம், மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ளது.
தொடரின் நிலை:
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், ஆஸ்திரேலிய அணி முதல் 3 ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியதுடன், ஆஷஸ் கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனால், இன்றைய ஆட்டம் இங்கிலாந்து அணிக்குத் தனது கௌரவத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய ஆறுதல் வெற்றி'க்கான போராட்டமாக அமைந்துள்ளது.
பலப்பரீட்சை:
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் உள்ளது. குறிப்பாக, ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சொந்த மண்ணில் அசுர பலத்துடன் உள்ளனர்.
இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதது பந்துவீச்சுக்குப் பலவீனமாக உள்ளது. ஜோ ரூட் மற்றும் ஹேரி புரூக் ஆகியோரையே அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.
மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சர் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்க்சில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர்.
தற்போதுவரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
English Summary
boxing day 2025 aus vs eng