காதலுக்காக தனியொருவராக 360 கோண அளவில் சுற்றும் வீடுகட்டி பரிசளித்த 72 வயது நபர்.! - Seithipunal
Seithipunal


360 கோண அளவில் சுற்றும் வீட்டினை 72 வயது நபர் கட்டி முடித்து, காதல் மனைவிக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்.

போஸ்னியா ஏர்செகோவினா (Bosnia and Herzegovina) நாட்டில் உள்ள சேர்பாக் நகரில் வசித்து வருபவர் வொஜின் குஷிக் (வயது 72). இவர் தனது மனைவியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவருக்கு சுழலும் வீட்டினை காட்டிக்கொடுக்க முயற்சித்து, அதனை செயல்படுத்தி மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார். 

காலையில் சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை, வீட்டிற்குள் இருந்தவாறு இயற்கை எழிலை கண்டு களிக்கும் வகையிலான, புத்தம் புதிய வீட்டை கட்டிய குஷிக், தனது அன்பு காதல் மனைவிக்கு பரிசளித்து இருக்கிறார். 

360 கோண அளவில் சுழலும் வீட்டின் வேகத்தை தேவைக்கேற்ப மாற்றியமைத்து கொள்ளவும் முடியும். வேகமாக வீடு சுழலும் பட்சத்தில், 22 வினாடியில் வீடு முழுவதுமாக சுற்றி முடிகிறது. மெதுவாக சுழன்றால், ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணிநேரமும் ஆகும். 

யாரின் உதவியும் இல்லாமல், தனது காதல் மனைவிக்கு தனது கைகளால் கட்டி வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து, 6 வருடங்களில் வீட்டினை கட்டி முடித்து இருக்கிறார். இந்த வீடு அப்பகுதியில் இருக்கும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பலரும் அதனை வந்து பார்த்து செல்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bosnia and Herzegovina 72 Aged Man Construct 360 Degree House Gift to Lovable Wife


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->