காட்டுத்தீயை கட்டுப்படுத்த பயன்பட்டு வந்த விமான சேவை நிறுத்தம் - இலாபம் வராததால் நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய குளோபல் சூப்பர் டேங்க் விமானம், லாபம் இல்லாததால் தனது சேவையை நிறுத்தியுள்ளது. 

மேலைநாடுகளில் காட்டுத்தீ தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பான தகவல்கள் அவ்வப்போது நமக்கு தெரியவருகிறது. 

காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரியும் சமயத்தில் விமானத்திலிருந்து இரசாயனப் பொடி மற்றும் நீரை தூவி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் விமானம் மூலமாக நடைபெற்று வந்த நிலையில், இரசாயன பொடியை தூங்குவதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் விமானம் தனது சேவையை செய்து வந்தது. 

இந்நிலையில், தனது தேவை லாபம் தராததால், இந்த விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானமாக இருக்கும் கோயில் 747-400 சூப்பர் டேங்கர் (Boeing 747-400 SuperTanker) விமானம், 400 அடி முதல் 800 அடி வரை தாழ்வாக இயங்கி இரசாயனப் பொடிகளை தூவும். 

இந்த விமானம் கடந்த வருடம் மட்டும் 119 முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் ,இந்த விமானத்தின் மூலமாக 74 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திறனும் இருந்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பொலிவியாவில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்காற்றியது. 

இந்த விமான சேவையில் லாபம் இல்லை என்று கூறி அதனை நிறுத்தி வைக்க முடிவுக்கு வந்துள்ளதாக அதன் முதலீட்டு நிறுவனமான ஆல்டர் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boeing 747 400 Supertanker Stops his Service due to Loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்




Seithipunal