பூட்டான்: சீனாவால் முடியாததை செய்யத்துணியும் பாகிஸ்தான்.. நஞ்சை மறைத்து வைத்து கபட நாடகம்..!
Bhutan President and Pakistan President speech through Telephone
இந்தியாவிற்கு எதிராக பேசும் வகையில் நேபாள நாட்டினை தூண்டி விட்டதை போல, பூட்டான் நாட்டினை தூண்டிவிடும் சீனாவின் முயற்சியானது தோல்வியில் முடிந்தது. எல்லை தொடர்பான பிரச்சனைகளை மேற்கோள் காண்பித்து, பொருளாதார உறவுகளை ஈர்த்து பூட்டானை இந்தியாவிற்கு எதிராக திசைதிருப்ப சீனா முயற்சி செய்தது.
ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியை சந்தித்த நிலையில், பூட்டானும் இந்தியாவுடன் கொண்ட நல்லுறவை மேலும் வளர்க்கவே விரும்பியது. பூட்டான் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பெரும்பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூட்டான் தலைமை சீனாவின் சதிவேலைகளை நன்கு தெரிந்து, சீனாவின் தொடர் சலுகைகளை அதிரடியாக நிராகரித்து, இந்தியாவுடன் தொடர் நெருக்கத்தை கொண்டு இருக்கிறது. சீனாவின் அடுத்த திட்டங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால், பாகிஸ்தானை வைத்து சீனா சதி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.
சீனாவின் திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு பாகிஸ்தானும் பூட்டானின் நெருக்கமான நாடு போல இருக்கும் நிலையில், நேற்று பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடன், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியுள்ளனர். மேலும், பாக். பிரதமரும், பூட்டான் பிரதமரும் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விஷயம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், " பூட்டான் பிரதமர் மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் பரஸ்பர ஒத்துழைப்பு, கொரோனா பரவல் குறித்து பல விஷயங்களை விதித்துள்ளனர். பூட்டானின் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையை இம்ரான் கான் பாராட்டியுள்ளார். பாகிஸ்தானிற்கு வரவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவு முக்கியத்துவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Bhutan President and Pakistan President speech through Telephone