'ஏலியன்கள் இருப்பது உண்மை; நெவாடாவில் ஏரியாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை; பராக் ஒபாமா..! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் பிரையன் டைலர் கோவன் (Brian Tyler Cohen) உடனான ஒரு நேர்காணலின் போது, ​​வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) இருப்பது குறித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் கேள்வி எழுப்பினர் 

அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது;  ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகளை சந்தித்தது இல்லை, ஆனால், ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

அத்துடன், ரகசிய அமெரிக்க விமானப்படை தளமிருக்கும் நெவாடாவில் ஏரியா 51 பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, ஏலியன்களை மறைத்து வைக்குமளவுக்கு நிலத்துக்கு கீழ் வசதியில்லை என்றும்,  இதற்கு மிகப்பெரிய சதி செய்து அமெரிக்க ஜனாதிபதிக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று பராக் ஒபாமா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Barack Obama says aliens are real


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->