கேரளா சிவில் போலீஸ் அதிகாரியை SFI அமைப்பினர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு..!
SFI members attack Kerala Civil Police officer
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மால் ஆஃப் ட்ராவன்கூர் (Mall of Travancore) உள்ளது. இந்த மால் வளாகத்தில், நேற்று சிவில் போலீஸ் அதிகாரியான மிதுன் ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது SFI அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சங்குமுகம் கடற்கரையில் நடந்த ஒரு மோதலில் மிதுன் ராய் SFI தொண்டர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மிதுன் ராய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மிதுன் ராய் தனது குடும்பத்தினருடன் மால் ஆஃப் ட்ராவன்கூர் வழக்கத்திற்கு வந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது. அத்துடன், அவரை அவதூறான வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வஞ்சியூர் போலீசார் SFI அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary
SFI members attack Kerala Civil Police officer