'இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்'; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!
K Stalins letter to the Prime Minister requesting that Sri Lankan Tamils in India be granted citizenship
தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். குடியுரிமை (அ) நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்று அறிவித்திட வேண்டும். '' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
K Stalins letter to the Prime Minister requesting that Sri Lankan Tamils in India be granted citizenship