இந்திய பௌலர்களின் பந்துக்கு அடி பணிந்த பாகிஸ்தான்; 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்ற Team India ..!
India beat Pakistan by 61 runs
10-வது டி20 உலகக் கோப்பையில் இன்று இந்திய- பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில், பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணியின், தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா றன் எதுவும் எடுக்காம ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி, அரை சத்தம் கடந்து, 40 பந்துகளில், 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் திலக் வர்மா 24 பந்துகளில், 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

04-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே கோல்டன் டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா குமார் 29 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிவம் தூபே 17 பந்துகளில் 27 ரன்களிலும், ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மாத்திரம் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் A பிரிவில், சூப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
English Summary
India beat Pakistan by 61 runs