2026-ஆம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல்: வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்நாட்டில் ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார்.அத்துடன், இந்தாண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவ தலைவர் வேக்கர் உஸ்ஜமான் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் பெரியளவில் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு ஏப்ரலில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladesh to hold elections in April 2026 says interim leader Muhammad Yunus


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->