51.7 சதவிகிதம் பெட்ரோல், டிஸெலின் விலையை உயர்த்திய நாடு.!  - Seithipunal
Seithipunal


வங்கதேச அரசாங்கம் நேற்று இரவு எரிபொருட்களின் விலையை 51.7 சதவிகிதம் உயர்த்தியது. மேலும், இன்று முதல் இது அமலுக்கு வரும் என்று தகவல் வெளியிட்டது. 

இதனால், நேற்றிரவு எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் புதிய விலை அமலுக்கு வந்த பிறகு சேவை தொடரும் என்று தங்களது சேவையை நிறுத்தி வைத்தது. இதனால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. 

வங்கதேச அரசின் மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சகம் அறிவித்தபடி 89 டாகாவில் இருந்து 135 டாகா வரை எரிபொருட்களின் விலையை உயர்த்தியது. 0.94 டாலரிலிருந்து 1.43 டாலருக்கு மாற்றமடைந்துள்ளது. 

எரிபொருட்களின் விலை 51.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரஷியா உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 

எரிபொருட்களின் விலையேற்றத்தினால் உலகத்தின் வளர்ச்சி 2.9 சதவிகிதம் குறையுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladesh government 51 percent petrol and diesel


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->