பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா , மாட்டாரா..?
Will Abhishek Sharma play in the match against Pakistan or not
10 வது, டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அமெரிக்கா , நமீபியா அணிகளுக்கு எதிராக 02 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. குரூப் ஏ பிரிவில் புள்ளிப் பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தில். உளது.
பாகிஸ்தான் அணியின் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
அரசியலிலும், விளையாட்டிலும் பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தானை வரும் 15-ஆம் தேதி கொழும்பு பிரேமதாச மாதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சினைகளால் அவதிப்பட்ட நிலையில்,டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
தற்போது அபிஷேக் சர்மா முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், அவர் உடல் பலவீனமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, வயிற்று போக்குக்கு பிறகு அவரது உடல் எடை சில கிலோ குறைந்து விட்டதாக அபிஷேக் சர்மாவே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் கூறுகின்றன. நமீபியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு அபிஷேக் சர்மா ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மிஸ் ஆகலாம் என கேப்டன் சூர்யகுமார் கூறியிருந்தமை நினைவில் கொள்ள தக்கது.
இதனால் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வாய்ப்பில்லை என்றும், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. நமீபியாவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், 03 சிக்சர்களுடன் 08 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதனால் அவரை கிஷான் கிஷனுடன் ஒப்பனிங்கில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் 15 ஆம் தேதி யார் விளையாடுவார் என்று.
English Summary
Will Abhishek Sharma play in the match against Pakistan or not