ஷேக் ஹசீனாக்கு வங்கதேச தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு...!
Bangladesh Election Commission issues order to Sheikh Hasina
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், வரப்போகும் வங்கதேச பொதுத் தேர்தலில் அவர் வாக்களிக்க தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ளது.
அந்நாட்டில், அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். அங்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், பதவி இழந்து நாட்டைவிட்டு வெளியேறி ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவை உள்ளது. இதனால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வாக்களிக்க தடைவிதித்தும், தேசிய அடையாள அட்டை முடக்கி வைத்தும் தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஷேக் ஹசீனா ஆட்சியின் போது பணியாற்றிய ராணுவ உயரதிகாரி, அவரது குடும்பத்தினர் தேர்தலில் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bangladesh Election Commission issues order to Sheikh Hasina