லுங்கியுடன் தாய்லாந்துக்கு தப்பித்துச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபர் - நடந்தது என்ன?
bangaladesh president escape tailand
வங்கதேசத்தின் முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் விமானம் மூலம் தாய்லாந்துக்கு தப்பித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு தனது மனைவி, சகோதரர் மற்றும் மைத்துனருடன் தாய் ஏர்வேஸ் விமானத்தில் வெறும் லுங்கி மட்டும் அணிந்தபடி விமானத்தில் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஹமீத் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹமீத் தப்பியது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. ஹமீதுக்கு நாட்டை விட்டு வெளியேற உதவியவர்களும், அவருடன் ஒத்துழைத்தவர்களும் பிடிபடாவிட்டால், தான் பதவி விலகுவதாக உள்துறை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
English Summary
bangaladesh president escape tailand