ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் இந்து கோவில் மீது தாக்குதல்!
Australia Tamil Hindu Temple Temple
ஆஸ்திரேலியா நாட்டின் தமிழர்களின் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
அந்நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள தமிழர்களின் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரம் டவுன்ஸ் பகுதியில் சிவ-விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படம் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவம் நடந்த அன்று தமிழர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது இந்த தாக்குதல் அரங்கேறியதாக, தமிழர் உஷா செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுபான்மையாக உள்ள இந்து சமூகத்தினரை அச்சுறுத்த நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விக்டோரியா மாநில முதல்வர் மற்றும் காவல்துறைக்கு தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Australia Tamil Hindu Temple Temple