சோமாலியா இராணுவ தளத்தின் மீது தாக்குதல் - 21 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பலி - Seithipunal
Seithipunal


சோமாலியாவின் தலைநகருக்கு வடக்கே உள்ள ராணுவ வளாகத்தின் மீது அல்-ஷபாப் தீவிரவாத குழு நேற்று நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் மற்றும் 21 அல்-ஷபாப் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவிலிருந்து வடக்கே 75 கிலோமீட்டர் (சுமார் 45 மைல்) தொலைவில் மத்திய ஷபெல்லேவில் உள்ள ஹவாட்லி இராணுவ வளாகத்தில் திடீரென நேற்று அல்-ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலையடுத்து ராணுவ முகாமில் இருந்த வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் ஐந்து வீரர்கள் மற்றும் 21 அல்-ஷபாப் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து சோமாலியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் ஒடாவா யூசுப் ரேஜ் கூறுகையில், துணிச்சலான சோமாலிய வீரர்களால் தாக்குதல் நடத்தியவர்கள் முறியடிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் கர்னல் அப்ஷிர் ஷடாகே என்ற மூத்த ராணுவ அதிகாரியும் அடங்குவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முகாம் நுழைவாயிலில் ஒரு தற்கொலை கார் குண்டுவெடிப்புடன் காலை தாக்குதல் தொடங்கியது என்றும், துப்பாக்கிச் சண்டை தொடங்குவதற்கு முன்பு முகாமுக்குள் மேலும் இரண்டு தற்கொலை குண்டுகள் வெடித்ததாக முகாமில் இருந்த ராணுவ வீரர் அப்டி ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on Somalia military base kills 21 al Shabaab terrorists


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->