இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள யூக்ளிட் என்ற இடத்தில் பிறந்தார்.

1987ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார்.

 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார்.

விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். சர்தார் வல்லபாய் படேல் விஸ்வ பிரதீபா விருது, நேவி கமென்டேஷன் விருது, நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது போன்ற பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Astraunat Sunitha Williams birthday today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->