ஆப்பிள் நிறுவனத்திடம் வசமாக சிக்கிய டிக் டாக்..!! அடுத்தடுத்து சிக்கிய நிறுவனங்கள்.!! 
                                    
                                    
                                   Apple Mobile data theft by Tic Tok and spread social media 
 
                                 
                               
                                
                                      
                                            டிக் டாக் செயலியின் நிறுவனமான பைட்-டான்ஸ், தனது டிக் டாக் செயலி மூலமாக ஐபோன்களின் விபரங்களை தானாக சேகரித்து வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனத்துடைய புதிய ஐ.ஓ.எஸ் 14 குறித்த விஷயம் வெளியாகியது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 
ஐ.ஓ.எஸ் 14 பீட்டா பாதிப்பு தொடர்பான விபரங்கள் சேகரிப்பு மற்றும் எச்சரிக்கை அம்சத்தை ஆப்பிள் தனது படைப்பிற்கு வழங்கியுள்ள நிலையில், பயனர்களின் விபரம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, டிக் டாக் செயலி மூலமாக இது சேகரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. 

டிக் டாக் செயலி தொடர்பான இந்த விவகாரத்தை பிழை என்று குறிப்பிட்டுள்ள நிலையில், பிற விபரங்கள் மற்றும் இது போன்ற செயல்களை சரி செய்து, டிக் டாக் செயலியை பதிவேற்றம் செய்து வழங்குவதாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த தேடலில் வானிலையை கூறும் அக்கியூ வெதர், கால் ஆப் டியூட்டி மற்றும் கூகுள் நியூஸ் போன்ற செயலிலும் ஆப்பிள் செயலியின் ஐ.ஓ.எஸ் 14 விபரங்களை சேகரித்து தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Apple Mobile data theft by Tic Tok and spread social media