வங்கதேசத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு; மற்றுமொரு அரசியல் தலைவர் சுட்டுக்கொலை; ஒரே மாதத்தில் 02 வது சம்பவம்..! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் கையிலெடுத்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். 

தற்போது அந்நாட்டில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சியில் உலா நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மதம் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழி நடத்திய ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்காவில் தனது பிரசாரத்தைத் நடத்திய போது, அடையாளம் தெரியாத நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த ஹாடி, உள்ளூர் மருத்துவமனைக்குப் பிறகு சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு 06 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18-ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, கொந்தளித்துப்போன மாணவ இயக்கத்தினர் வங்கதேசத்தின் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இதன் போது போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அத்துடன், இந்து இளைஞரை முஸ்லீம் ஒரு கும்பல் கடுமையாக தாக்கி சாலையில் தீயிட்டு எரித்து கொடூரமாக கொன்றது. சர்வதேச நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,மற்றுமொரு தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர், இன்று மதியம் 12.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணம் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டங்களைத் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களால்  அந்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another political leader shot dead in Bangladesh


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->