வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியம்; மற்றுமொருவர் மீது தீ வைப்பு..!
Another Hindu man set on fire in Bangladesh
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி மாதல் பொது தேர்தல் நடை பெறவுள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதோடு, அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது.
இதைத்தொடர்ந்து ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தற்போது ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து நபர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் நபர், 50 வயதான கோகோன் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தது.
English Summary
Another Hindu man set on fire in Bangladesh