அணுசக்தி நிலையங்கள் பட்டியலை பரஸ்பரமாக பரிமாறிய இந்தியா - பாகிஸ்தான்..! - Seithipunal
Seithipunal


இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த, 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

குறித்த ஒப்பந்தம் 1991-ஆம் ஆண்டு ஜனவரி 27-இல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு 1992-ஆம் ஆண்டு ஜனவரி 01-ஆம் தேதி முதல், இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 01-ந் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.

அந்த வகையில், தொடர்ந்து 35-வது முறையாக இரு நாடுகளும் பரஸ்பரமாக அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டன. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை அளித்துள்ளது. அதனபடி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பட்டியலை அளித்துள்ளது.

குறிப்பாக, பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமாகவுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தப்படி அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India and Pakistan mutually exchanged lists of nuclear facilities


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->