பொங்கலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணையும்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran says that several parties will join the National Democratic Alliance after Pongal
பொங்கலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணியில், மேலும் பல கட்சிகள் இணையும் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 17, 18 வயதுள்ள இளைஞர்கள் கையில், பாட புத்தகங்களுக்கு பதில் அரிவாள் இருப்பது மிகுந்த வேதனையாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு நடவடிக்கையாக ஆட்சியை கலைக்க வேண்டியதில்லை. வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக தானாகவே அது நடந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக காங்கிரசுக்குள் ஏராளமான குழப்பங்கள் உள்ளன என்றும், அவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளதோடு, த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு சிலர் முயற்சிக்கின்றனர்.இது தான், அங்கே பெரும் பிரச்சினையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 1996-இல், காங்கிரசில் இருந்து பிரிந்து, த.மா.கா., உருவானது என்றும், அதைப் போன்றதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், பொங்கலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணியில், மேலும் பல கட்சிகள் இணையும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 4.5 லட்சம் கோடியாக இருந்த மாநிலக் கடன், தற்போது ரூ.9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நிதி மேலாண்மை சரியில்லாததால், மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நடிகர் விஜய் சில நிகழ்வுகளுக்கு மட்டுமே கருத்துச் சொல்கிறார். அது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர், பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தால் வரவேற்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
English Summary
Nainar Nagendran says that several parties will join the National Democratic Alliance after Pongal