இனவெறி தாக்குதல்..? அயர்லாந்தில் மீண்டும் இந்தியர் மீது மர்ம கும்பல் வெறிச்செயல்: கன்னத்தில் எலும்பு முறிவு அளவுக்கு அடி, உதை..!
Another gang attack on an Indian in Ireland
அயர்லாந்தில் மீண்டும் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் டப்ளினில் 32 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தோஷ் யாதவை ஆறு இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதன்காரணமாக அவரது கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று சமீபத்தில், டல்லாட்டில் வயதான இந்தியர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி, அவரது ஆடையை களைந்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவமும் இனவெறி காரணமாக நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு குடிபெயர்ந்த சந்தோஷ்யாதவ், ஐரிஷ் போலீசாரை அணுகியதாகவும், ஆனால், அவர்கள் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

டப்ளின் முழுவதும் இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கும் கடினமாக இருக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இவரை தாக்கிய நபர்கள் இளைஞர்கள் தனது கண்ணாடியைப் பறித்து இரக்கமின்றி அடித்ததாகவும், இது ஒரு தூண்டுதலற்ற இனவெறித் தாக்குதல் ஆகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் (டீனேஜர்கள்) என்றும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் போது அவருடைய கண்ணாடியைப் பிடுங்கி உடைத்து, பின்னர் தலை, முகம், கழுத்து, மார்பு, கைகள் மற்றும் கால்களில் இடைவிடாமல் அடித்ததில் ரத்த காயங்கள் ஏற்பட்டன என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது என்றும், குறித்த குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். அவர்கள் சுதந்திரமாக ஓடி, மீண்டும் தாக்கத் துணிகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்றும்,அவரது இளம் வயதில்லையே அவரது தந்தை இறந்துவிட்டதாகவும், இந்தியாவில் அவருடைய அம்மா மட்டுமே இருக்கிறார் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்நிலையில், அவர் சொந்த நாட்டை விட்டு இங்கு வேலை செய்யவும், பங்களிக்கவும், ஏதாவது நல்லதைச் செய்யவும் வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஒவ்வொரு மாதமும் நான் கிட்டத்தட்ட 40% வரி செலுத்துவதாகவும், குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் இவ்வாறு அசம்பாவிதங்கள் நடக்கிறது; இப்போது பாதுகாப்பான இடம் இது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது மனதளவில் தொந்தரவு தருகிறது, வெறுப்பூட்டுகிறது மற்றும் ஏமாற்றமளிக்கிறது என்று அவர் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
English Summary
Another gang attack on an Indian in Ireland