கட்சித் தலைவர் புகைப்படங்களை அரசுத் திட்ட விளம்பரங்களில் இடுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது - உயர்நீதிமன்றம் அதிரடி!
Chennai HC Ungaludan stalin ADMK DMK
சென்னை உயர்நீதிமன்றம், அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயர் மற்றும் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விளம்பரத்தில் கருணாநிதியின் படம் இடம்பெற்றதற்கும், ஸ்டாலின் பெயர் பயன்படுத்தப்பட்டதற்கும் எதிராக, அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, "முதல்வரின் படம் சட்ட விதிகளுக்குள் பயன்படுத்தப்படலாம். ஆனால் கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் போன்றவர்களின் புகைப்படங்களை அரசுத் திட்ட விளம்பரங்களில் இடுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்பட்டது" என தெரிவித்தது.
மேலும், திட்டங்களின் பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர், கட்சி சின்னம், பெயர்கள் பயன்படுத்தப்படுவதும் சட்டத்திற்கும் தேர்தல் ஆணைய உத்தரவுக்கும் எதிரானது எனவும் நீதிமன்றம் எச்சரித்தது.
அரசு நலத்திட்டங்களை தொடங்குவதற்கோ, செயல்படுத்துவதற்கோ எந்தத் தடையும் இல்லை எனத் தெளிவுபடுத்திய நீதிமன்றம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்துவது குறித்து வந்துள்ள புகாரை தேர்தல் ஆணையம் ஆராய்வதில் இந்த வழக்கு தடையாகாது எனவும் கூறியது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai HC Ungaludan stalin ADMK DMK