Kids evening ஸ்னாக்ஸ்கு காய்கறி இட்லி எப்படி பண்ணலாம்னு பாக்கலாமா...?
Lets see how to make vegetable idly kids evening snacks
காய்கறி இட்லி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
இட்லிகள் - 15
பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
காய்கறிகள் - 2 கப் (நறுக்கியது)
தக்காளி - 3
குடை மிளகாய் - 3 (நறுக்கியது)
வேக வைத்த பட்டாணி - 2 கப்
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்

செய்முறை :
முதலில்,காய்கறி இட்லி செய்வதற்கு முதலில் இட்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பூண்டைத் துருவிப் போட்டு வதக்கவும்.
குடைமிளகாய், காய்கறிகள், தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். சிவப்பு நிறக் கேசரி கலரைக் காய்கள் வெந்தவுடன் சிறிதளவு தூவி கலக்கவும்.கொத்தமல்லி இலைகளைத் தூவவும். இட்லிகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி, காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது சுவையான சூடான காய்கறி இட்லி ரெடி.
English Summary
Lets see how to make vegetable idly kids evening snacks