இனிமே ஆரஞ்சு தொலை தூக்கி போடாமல் தொக்கு செய்து பாருங்கள்... அருமையாக இருக்கும்...!
Dont throw away your orange peel try orange peel thokku
கமலா ஆரஞ்சு தோல் தொக்கு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
ஆரஞ்சு தோல் - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
வெல்லம் - சிறியது
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :
முதலில்,ஆரஞ்சுத் தோலைத் துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வேக வைத்த தோலுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.
வறுத்த பின் சிறு தீயில் மிளகாய் தூள், பெருங்காய தூள் போடவும். பிறகு அரைத்த ஆரஞ்சு விழுது கலவையைப் போட்டுக் கலக்கவும். வெல்லத்தை உடைத்துத் தூளாக போட்டுக் கலக்கவும். கெட்டியாக ஒட்டாத பதமாக எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் தீயை அணைத்து விடவும். சுவைமிகுந்த தொக்கு ரெடி.
English Summary
Dont throw away your orange peel try orange peel thokku