கடுகு எண்ணெய் வைத்து வடுக்கலையை மறைக்க வைக்க முடியும்...!
You can hide scars with mustard oil
வயிற்று வரிகளை ஒழிக்க:
பெண்களுடைய, கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.
சருமம் மினுமினுக்க:
குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதன் மூலம் சருமம் மினுமினுக்கும்.குளிருக்கு இதமாகவும் இருக்கும்.

சருமத்தைப் பராமரிக்க:
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.
முடி உதிர்வு கட்டுப்படுத்த:
கடுகு 100 கிராம், சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி நிலைக்கும்.
அரிப்பு குணமாக:
கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும்.
English Summary
You can hide scars with mustard oil