அவரே செலவுக்கு பொண்டாட்டி நகையை வித்துட்டு இருக்காரு.. போவியா.. அணில் அம்பானி கடன் வழக்கில் திகீர்.! - Seithipunal
Seithipunal


அணில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் ரூ.69 இலட்சம் கோடி கானை மறுசீரமைக்க, சீன நாட்டினை சார்ந்த மூன்று வங்கியிடம் இருந்து ரூ.51 கோடி கடன் பெற்று இருந்தது. இதற்கு அணில் அம்பானி தனிப்பட்ட உத்திரவாதம் தந்திருந்தார். 

இந்த கடனை திரும்பி வழங்காத காரணத்தால், அவர் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று சீன வங்கிகள் ஐரோப்பிய நாட்டில் இருக்கும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் பதிலளித்த அணில் அம்பானி, தனக்கென தனிப்பட்ட சொத்துக்கள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். 

இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த வங்கிகள், அவருக்கு சொந்தமாக சொகுசு கார்கள், தனி விமானம், ஹெலிகாப்டர் போன்றவை இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அணில் அம்பானி, அவை அனைத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்தார்.

இதனால் விரக்தியடைந்த நீதிபதிகள், அணில் அம்பானிக்கு உலகளவில் உள்ள சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் காணொளி வாயிலாக நீதிபதிகளிடம் உரையாடியுள்ளார்.

" அணில் அம்பானியிடம் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை. ஊடகங்கள் யூகத்தின் வாயிலாக தவறான தகவலை பரப்பி வருகிறது. பெரும் கடனால் அவரின் சொத்துக்களை இழந்துள்ளார். சட்டரீதியான செலவுக்கு கூட மனைவியின் நகைகளை விற்பனை செய்து இருக்கிறார் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anil Ambani Sales his wife Gold Jewels for Expense


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal