மீனவர் வலையில் சிக்கிய 512 வயதுடைய கிரீன்லாந்து சுறா..! ஆய்வில் வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடைபெற்று வளர்கிறது. அவ்வாறு நடைபெறும் விஷயங்கள் அனைத்தும் நம்மை பெரும் ஆச்சரியத்திற்கு மத்தியில் உள்ளாக்குவதும் வழக்கமான ஒன்றுதான். வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 

இந்த சமயத்தில்., இவர்களின் வலையில் 28 கீரின்லாந்து சுறாக்கள் வலையில் பிடிபட்ட நிலையில்., இவற்றை மேலே தூக்கிய மீனவர்களுக்கு பெரும் ஆச்சர்ய விஷயம் தென்பட்டுள்ளது. சுமார் 512 வயதுடைய கிரீன்லாந்து சுறா இருந்துள்ளது. கிரீன்லாந்து சுறாக்களை பொறுத்த வைகையில் வருடத்திற்கு ஒரு செ.மீ அளவிற்கு வளரும் அமைப்பை கொண்டுள்ளது. 

ancient shark, உலகின் பழயமான சுறா, பழமையான சுறா,

இந்த சுறாக்கள் அனைத்தும் பல நூறு ஆண்டுகள் வளரும் தன்மையும் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது குறித்த ஆய்வில் கிரீன்லாந்து நாட்டில் உள்ள சுறாவில் இந்த வகையான சுறா 18 அடி வரை இருக்கிறது என்றும்., ரேடியோ கார்பன் என்னும் முறைப்படி செய்த சோதனையை அடுத்து., இந்த சுறாவின் வயதானது 272 வயது முதல் 512 வயது வரை இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த செய்திக்கான வீடியோ பதிவு: 

Scientists claim ‘ancient’ shark is world’s oldest living vertebrate 

Long in the tooth: 'Ancient' shark believed to be world's oldest living vertebrate

இந்த சுரவானது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகையான சுரவானது நெப்போலியன் போர் மற்றும் டைட்டானிக் கப்பல் மூழ்ங்கிய சமயத்திலும் கடல்களில் வாழ்ந்திருக்கலாம் என்றும்., இந்தியாவை பொறுத்த வரையில் முகலாய படையெடுப்பிற்கு பின்னரில் இருந்து இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தற்போது கண்டறியப்பட்ட சுறாவை ஆய்வு செய்வதன் மூலமாக பருவ மாற்றம் மற்றும் மாசுபாடு போன்ற காரணிகளை கண்டறிய உதவும். இந்த சுறாவின் மரபணுவை வைத்து மேற்கொள்ளப்படும் ஆய்வில் பல விஷயங்கள் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ancient shark is discovers by fishers in Greenland sea


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->