306 ஆண்டு சாதனை முறியடிப்பு; 18 வயதில் உலகின் இளம் பேராசிரியராக கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க இளைஞர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்​கா​வின் புளோரி​டாவைச் சேர்ந்​தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்​களில் உலகின் மிக இளம்​வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்​னஸ் புத்​தகத்​தில் இடம்​பெற்​றுள்​ளார். இதன் மூலம், நாதன் தாமஸ் 306 ஆண்​டு​ சாதனையை முறியடித்​துள்​ளார்.

இதற்​கு​ முன்னதாக 1717-ஆம் ஆண்​டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவி​யேற்று ஸ்காட்​லாந்து கணித​விய​லா​ளர் கோலின் மெக்லாரின் மிக இளம்​வயது பேராசிரியர் என்ற சாதனையை படைத்​திருந்​தார். அடுத்ததாக 2008-ஆம் ஆண்​டில் அலியா சபூர் என்ற பெண் 18 வயதிலேயே இளம் பேராசிரியர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

இந்நிலையில் அலியா சபூரை விட, 16 நாட்​கள் இளை​ய​வர் நாதன் தாமஸ். இதன்​மூலம் இரு​பாலரிலும் இவரே இளம் வயது பேராசிரியர் ஆவார்.

நாதன் தாமஸ், மியாமி டேட் கல்​லுாரி​யில் இன்​ஜினீயரிங் பாடங்​களை கற்​றுக்​கொடுக்​கும் பணி​யில் இணைந்​துள்​ளார். அவர் தனது 10 வயதிலேயே அக்​கல்​லூரி​யில் பள்​ளிப்​படிப்​புடன் சேர்த்து கல்​லூரிப் படிப்பையும் தொடங்​கியுள்ளார். பின்னர் தனது 14-வது வயதில் புளோரிடா சர்​வ​தேசப் பல்​கலைக்​கழகத்​தில் கல்​லூரி படிப்பை தொடங்கினார்.

மின் பொறி​யியல் துறை​யில் இளங்​கலை், முதுகலை பட்டங்களையும் 18 வயதுக்​குள் முடித்​துள்ளார். தற்​போது தான் படித்த கல்​லூரி​யிலேயே பேராசிரிய​ராக மாறி சாதனை படைத்​துள்​ளார். மியாமி பல்​கலைக்​கழக சட்​டப் பள்​ளி​யில் டாக்​டரேட் பட்டத்துக்கான ஆராய்ச்​சி படிப்​பை​யும்​ தற்போது மேற்​கொண்​டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American youth sets Guinness record as world's youngest professor at age 18


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->