நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார்; முக்கிய அம்சங்கள் என்ன..? - Seithipunal
Seithipunal


தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவதும், நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார்.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை இன்று காலை கூடியது. அதன்​படி காலை 10 மணிக்கு, பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார்.

அதன்பின்னர் பேசிய அவர், தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசியதோடு, உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின் தவெக அரசு நல்கி வருவதாகக் கூறினார்.

அத்துடன், ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளதாகவும், இன்னும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரங்கள் கீழ்வருமாறு;

டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது.

'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள்.

அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.139 கோடி இதற்காக ஒதுக்கீடு.

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால் திட்​டங்​கள் பொது​மக்​களை கவரும் வகை​யில் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் மகளிர் உரிமைத் தொகை உயர்​வு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டங்​கள் உட்பட பல்​வேறு அறி​விப்​பு​கள் இடம்​பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்​ஜெட் மீதான விவாதம் முடிந்​தவுடன் தொடர்ந்து துறை​கள் வாரி​யாக மானியக் கோரிக்கை மீதான விவாத​மும் அமைச்​சர்​களின் பதி​லுரை​யும் இடம்​பெறும். இதற்​காக சுமார் ஓரு மாதம் வரை சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடத்த வாய்ப்​பு​கள் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Budget 2026 to 7 was presented by Finance Minister Maria Wilson


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->