உத்தராகண்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும், வடஇந்தியாவின் பல மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன..! - Seithipunal
Seithipunal


உத்தராகண்ட் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (அக்.06) ரிக்டர் அளவில் 4.9 நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் காரணமாக தலைநகர் டெல்லி-என்சிஆர் உட்பட வடஇந்தியாவின் பல மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் (இன்று) செவ்வாய்க்கிழமை இரவு 10:22 மணி அளவில் ஏற்பட்டது. உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியே 13 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவாகப் பதிவானதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நில அதிர்வு மையத்தின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இதன் அளவு 4.9 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக டெல்லி, நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற டெல்லி-என்சிஆர் பகுதிகள் முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. மேலும், உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு இடங்களிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்து வீடுகளை விட்டு பதறியடித்து வெளியேறியுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. குறித்த நில அதிர்வுகள் அடங்கிய பின்னர் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தவொரு புகாரும் இதுவரை பதிவாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake strikes Uttarakhand today


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->