தவெக அரசை விமர்சிப்போருக்கு இன்ஸ்டாகிராமில் கட்டுப்பாடுகள்; வெளிப்படையான விசாரணை வேண்டும்; கனிமொழி எம்.பி...! - Seithipunal
Seithipunal


''தவெக அரசை விமர்சிப்போருக்கு இன்ஸ்டாகிராமில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எந்தவொரு அரசாங்கமும் அரசியல் கட்சியும் விமர்சனத்தைக் கண்டு அஞ்சக்கூடாது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்''என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; ''அரசியல் போட்டியில் கருத்து சுதந்திரம் பலிகடா ஆக்கப்படக் கூடாது. தவெக அரசை விமர்சிக்கும் பல குரல்கள், இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளையும் குறைந்த பார்வையாளர்களையும் எதிர்கொள்வதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வருகின்றன.

சட்டப்பூர்வமான அரசியல் விமர்சனங்களை முடக்குவதற்காக, புகார் அளிக்கும் முறைகள் திட்டமிட்டோ அல்லது உள்நோக்கத்தோடோ தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதுகுறித்து தீவிரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த புகார்களை ஆய்வு செய்து, வெளிப்படையான நடவடிக்கையை உறுதிப்படுத்தவும், சட்டப்பூர்வமான ஜனநாயக கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உரிய இணையவழி அதிகார அமைப்புகள் மற்றும் மெட்டா நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்.

எந்தவொரு அரசாங்கமும் அரசியல் கட்சியும் விமர்சனத்தைக் கண்டு அஞ்சக்கூடாது. அடக்க நினைப்பவர்களின் சத்தத்தை விட, ஜனநாயகத்தின் குரல் எப்போதுமே உரக்க ஒலிக்க வேண்டும்.'' என்று அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP Kanimozhi calls for a transparent inquiry into the Instagram restrictions imposed on those criticizing the TVK government


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->