இந்துக்கள் மீதான வெறுப்பு உலகம் முழுவதும் அதிகரித்து உள்ளாக சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்துக்களுக்கு எதிரான ஆபத்து வளர்ந்து வருகிறது என அமெரிக்கவை சேர்ந்த ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது!

இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராகவே வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். சிறுபான்மையினை இந்துக்கள் வாழ அச்சப்படும் நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறலாம் என மத்திய அரசு சட்டத்தை இயற்றியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லீசெஸ்டர்ஷையரில் இந்து கோயில் மீது வன்முறை தாக்குதல் நடந்தேறியது. பிறகு மீண்டும் கடந்த 19ஆம் தேதி இங்கிலாந்தின் ஸ்மெத்விக் பகுதியில் உள்ள இந்து கோயிலுக்கு வெளியே போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். அப்பொழுது கோவில் சுவற்றின் மீது ஏறி குதிக்கும் வீடியோ காட்சிகளும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீப காலமாக அமெரிக்க மற்றும் கனடா பகுதிகளில் உள்ள இந்து கோயில்கள் சூறையாடப்படும் நிகழ்வு நடந்து வருகிறது. இது குறித்து அமெரிக்கவை சேர்ந்த கண்டேசியன் ஆராய்ச்சி மைய இயக்குனர்களில் ஒருவர் ஜொயில் பிங்கள்ஸ்டீன் பேசுகையில் உலகம் முழுவதும் இந்துக்களுக்கு எதிராக ஆயிரம் சதவீதம் அளவு வெறுப்புணர்வு வளர்ந்துள்ளது. 

இந்துக்களுக்கு எதிராக பகைமையை வளர்க்கக்கூடிய மீன்கள் பிற வடிவிலான கதைகள் மற்றும் வெள்ளை இன ஆதிக்க வாதிகள் வெறுப்புணர்வு இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தவரின் வெறுப்பு ஆகியவை பகையை உண்டாக்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American research says that hatred towards Hindus is increasing all over the world


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->