நியாயம் கேட்டு போராடிய மக்கள்.. துப்பாக்கியை தூக்கிய தம்பதி.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு காவல் அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் காவல்துறைக்கு வழங்கப்படும் நிதியை குறைக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மிசோரி மாநிலத்தில் இருக்கும் செயின்ட் லூயிஸ் நகர மேயர் காவல்துறைக்கு அளிக்கும் நிதியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பொதுமக்கள் கூறிய நிலையில், அவர்களின் விபரத்தை மேயர் வெளியிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் அவரது இல்லத்தை நோக்கி பயணம் செய்த நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர்களான மார்க் மற்றும் அவரது மனைவி பெட்ரிகா போராட்டக்காரர்களை தடுக்க முயற்சி செய்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறி வந்ததால் ஆத்திரமடைந்த தம்பதி தங்களின் இல்லத்தில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து வந்து, போராட்டக்காரர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, காவல் துறையினர் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானம் செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American couple warn peoples with gun


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->