வீடியோ காலில் காதலி கண்ட காட்சி.. காதலனின் வீட்டை கொளுத்திய கொடூர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


தான் வீடியோ கால் செய்த போது வேறொரு பெண் போனை எடுத்ததால் ஆத்திரமடைந்த காதலி காதலனின் வீட்டை கொளுத்தியுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸில் வசித்து வருபவர் செனெய்டா மேரி சோடோ (வயது 23). இவர் நள்ளிரவில் தனது காதலரின் வீட்டுக்குள் புகுந்து அவரின் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மேரியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேரி, தனது காதலருக்கு வீடியோகால் செய்த சமயத்தில் மற்றொரு பெண் பதிலளித்தார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை பழிவாங்க வீட்டை கொளுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில், அந்த நபருடன் இருந்த பெண் உறவினர் என்பதும், காதலி ஆத்திரப்பட்டதால் காதலனின் வீடு தீக்கிரையானதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america women fired her boy friend house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->