உலகிலேயே இந்தியா விதிக்கும் வரிகள் தான் அதிகம் - அதிபர் ட்ரம்ப்.!!
america president trumph tweet about india
அமெரிக்க நாட்டின் அதிபரான ட்ரம்ப் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அறிவித்துள்ளார்.
இந்திய அதிகளவில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு ஆகஸ்ட் முதல் அதாவது நாளை அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள் தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை.
ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
america president trumph tweet about india