ரஷ்யாவிற்கு அடுத்த அடி கொடுத்த அமெரிக்கா.. அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த மதுபானம், கடலுணவு, வைரம் உள்ளிட்ட வர்த்தகத்தை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அதிபர் புதின் நிச்சயம் விலை கொடுத்தே ஆக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், ஜி 7 மற்றும் ஐரோப்பாவின் நட்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த போவதாகக் கூறினார். 

மறைமுகமாக ரஷ்யாவிற்கும் அதிபர் புதினுக்கு பண உதவி முதல் அனைத்து உதவிகளையும் செய்து வரும் அந்நாட்டு தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மேலும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வரும் ஆடம்பர பொருட்களை தடை செய்வதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America president Joe Biden ban Russia luxury product


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->