பெண்ணின் இதயத்தை சமைத்து, அங்கிள், ஆண்டிக்கு விருந்து வைத்த வினோதம்.. பதறவைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்மணியை கொலை செய்து, பெண்ணின் இதயத்தை சமைத்து உறவினருக்கு விருந்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் இருக்கும் ஒக்லஹோமா (Oklahoma) நகரை சார்ந்த 42 வயதுடையவர் லாரன்ஸ் பவுல் ஆண்டர்சன் (Lawrence Paul Anderson). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்துவ அந்த பெண்மணியை கொலை செய்து, அவரின் இதயத்தை சமைத்துள்ளார். 

மேலும், இதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து அவரது மாமா, மாமாவின் மனைவி மற்றும் நான்கு வயது குழந்தைக்கு கொடுத்துள்ளார். இதன்பின்னர், அவர்களையும் கொடூரமாக தாக்கிய நிலையில், நான்கு வயது சிறுமியையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். 

சுமார் இரண்டு நாட்கள் கழித்து இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஆண்டர்சன்னை கைது செய்தனர். விசாரணையில், 42 வயதாகும் ஆண்டர்சன் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் வழக்கில் 20 வருட சிறை தண்டனை கைதி என்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 15 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில், ஜாமினில் விடுதலையாகி தனது மாமா, அத்தை வீட்டிற்கு வந்தவர் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America Oklahoma man Lawrence Anderson Murder Lady and Eating his Heart


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->