54 வயது ஆணுடன் டேட்டிங் செய்த 21 வயது பெண்.. பிரிய மனமில்லாமல் தவிக்கும் காதலி..! 90 கிட்ஸ் கண்ணீர்.!! - Seithipunal
Seithipunal


54 வயது ஆணுடன் 21 வயது பெண்மணி லிவிங் டுகெதர் டேட்டிங் வாழ்க்கையில் 3 வருடங்கள் ஈடுபட்ட நிகழ்வு நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் (Michigan) பகுதியை சார்ந்த பெண்மணி நிகோலஸ் டவுன்ஸ் (வயது 21, Nicole Downs). இவரது காதலர் மைக்கேல் (வயது 54, Michael). இவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக லிவிங் டுகெதர் முறையில் டேட்டிங் செய்து வந்துள்ளனர். இந்த தகவலை நிகோலஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யவே, இதுதொடர்பான தகவல் பெரும் வைரலாகியுள்ளது. 

இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் நிகோலஸ் டவுன்ஸ், "கடந்த 3 வருடங்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. 3 வருடங்கள் உங்களுடன் நான் எப்படி இருக்கப்போகிறேன் என்று சிந்தித்து முடிப்பதற்குள் அது முடிந்துவிட்டது. நான் மிகவும் அதிஷ்டம் செய்தவளாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட பலருக்கும் அப்போது தான் தெரியவந்துள்ளது நிகோலஸ் 54 வயது நபருடன் டேட்டிங் செய்துள்ள விஷயம். 

இந்த பதிவுக்கு முன்னதாக நிகோலஸ் தனது தந்தை மைக்கேலுடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்கிறார் என நினைத்திருந்த நிலையில், 3 வருட டேட்டிங் நிறைவு பெற்றதை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட பதிவில் அனைத்தும் புரியவந்துள்ளது. இதனையடுத்து, பலரும் அக்காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர், தங்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் வாழ்த்து மழையை பொலிந்து தள்ளியுள்ளனர்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் Sugar Daddy என்ற விஷயம் நடைமுறையில் இருந்து வருகிறது. Sugar Daddy என்பது, "இளைய தோழருக்கு நிதி மற்றும் பொருள் ஆதரவை வழங்கும் ஒருவர்" என அர்த்தமாகும். Oxford University அகராதியின் விளக்கப்படி, Sugar Daddy என்பது, Sweeten என்ற வார்த்தையில் இருந்து பேச்சுவழக்கில் மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களின் டேட்டிங் வாழ்க்கை குறித்த தகவல் வெளியாகி, அது டிக் டாக் செயலில் பதிவு செய்யப்பட்டு பெரும் வைரலாகியுள்ளது. மேலும், இதுகுறித்து நிகோலஸ் டவுன்ஸ் தெரிவிக்கையில், "நாங்கள் இருவரும் 3 வருடம் சேர்ந்து வாழ்ந்தோம். Sugar Daddy உடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தாலும், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். எனக்கு அது வலியை ஏற்படுத்துகிறது என்றாலும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

நாங்கள் டேட்டிங் வாழ்க்கையில் இருப்பது பலருக்கும் இப்போது தான் தெரியும். நாங்கள் யாரிடமும் எதையும் கூறவில்லை. முதலிலேயே இதனை தெரிவித்து இருந்தால், பல விமர்சனம் வந்திருக்கும். அதனால் அதனை நாங்கள் செய்யவில்லை" என்று தெரிவித்தார். மைக்கேலும் நிக்கோலஸின் பதிவை Sugar Baby என்ற ஹாஷ்டேக் பதிவிட்டு பகிர்ந்துள்ளார். 

இருவரும் Sugar Baby மற்றும் Sugar Daddy என்ற ஹாஷ்டேக்கை பொதுவாக உபயோகப்படுத்தியுள்ளது, காதல் ஜோடி எதோ காரணத்திற்காக இணைந்து தற்போது பிரிகிறது. இதில் முக்கியத்துவம் கொடுக்க வேறொன்றும் பெரிதாக இல்லை என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ 21 உடன் வாழ்ந்த 54 நம்மூர் 90 கிட்ஸின் சாபத்தை வாரி பெறப்போகிறார் என்பது மட்டும் ஊர்ஜிதம்..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Michigan 54 Aged Man Michael Sugar Daddy Live with Sugar Baby Nicole Downs Dating Last 3 Years


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal