ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்கா மகிழ்ச்சி - ஜேனட் யெல்லன் - Seithipunal
Seithipunal


அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்கா நிதி அமைச்சர் ஜேண்ட் யெல்லன், உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் மைக்ரோசாப்ட் மையத்தில் நடைபெற்ற வணிக தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றார்.

பின்பு டெல்லியில் நடைபெற்ற இந்தியா, அமெரிக்கா இடையிலான பொருளாதார கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எவ்வளவு வேண்டுமானாலும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

உக்ரைன் போருக்கு பின் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடையால் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்றும், சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் முக்கிய வணிக நாடாக இந்தியா மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் தொடர்ந்து வாங்குவதில் அமெரிக்க மகிழ்ச்சியடைகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America happy as India buying more crude oil from russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->