தேர்வின் போதே பிரசவ வலி... கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் தேர்வு எழுதிய பெண்மணி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை சார்ந்த பெண்மணி ஹீல். இவர் லயோலா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், வழக்கறிஞராக பணி செய்ய பார் கவுன்சில் தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந்தார். 

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் கருவுற்று இருந்த நிலையில், நடக்கவிருந்த தேர்வு கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது. இதனையடுத்து இணையத்தளம் வாயிலாக கடந்த 5 ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக முதல் நாள் தேர்வை எழுத்துகையிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும், இணையதள தேர்வு முறைப்படி கணினி திரையினை விடுத்து வேறெங்கும் பார்த்தால் தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால், நாற்காலியை விட்டு அசையாமலேயே கணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஹீலின் கணவர் மருத்துவமனைக்கு சென்று செவிலியரையும் உடன் அழைத்து வந்த நிலையில், முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அன்றைய தினத்தின் மாலையே அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

பின்னர் மறுநாள் தேர்வையும் அவர் மருத்துவமனையிலேயே எழுதியுள்ளார். பின்னர் தற்போதே இது குறித்த தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America girl complete exam in pregnancy ward after delivery male baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->